Sunday, April 26, 2020

Ulaga Azhagi : உலக அழகி : world Queen

ஒருபானை சோற்றுக்கு
ஒருசோறு பதமாம்
உன் அரைநொடி
வெட்கம் போதும்
உன்னை உலக அழகி
என்று ஒப்புக்கொள்ள..!

Un Uthadu : Lips

உன் உதட்டுக்கும்
அதை உரசிச்ச செல்லும்
காற்றுக்கும் இடையில்
நிகழும் மகரந்தச்சேர்க்கையில்
அழகாய் பிறக்கின்றன
சங்கீத ஸ்வரங்கள்..!

Love Travel

என் வாழ்க்கை என்னும்
நெடுந்தூர பயணத்தில்
ஆங்காங்கே என்னை
இளைப்பாறச் செய்கின்றன
உன் பெயர்
எழுதி வைத்த
விளம்பர பலகைகள்..!

இயற்கை : Tamil Nature Girl

இயற்கையின் எழிலைப்பற்றி
எழுதச் சொன்னார்கள் என்னிடம்
ஆனால் எனக்கோ
இயற்கையாகவே உன்
எழிலைப்பற்றித்தான் எழுதத்
தோன்றுதடி வார்த்தைகள்.!

Ex Love : Love Failure

உரையாடல் நிகழ்ந்து
வருடங்கள் ஆனாலும்
ஒவ்வொரு சந்திப்பிலும்
சிறுசிறு புன்கைகளால்
என் கவிதைகளுக்கு
தலைப்புகளை தவறாமல்
தந்துவிட்டு போகிறாள்
அந்த பாவிமகள்.!

Penmai : Arali Poo Images with Kavithai : Pennai Varnikkum Kavithai Aangalukkaga


Arali Flower
உன்
மையிட்ட விழியும்
உதட்டுக்குக்கீழ் மச்சமும்
சண்டை போட்டுக்கொண்டன
யார் உன்னை
அழகாய் காட்டியதென்று
மௌனமாய் வந்து
எட்டிப்பார்த்து சென்றது
உன் வெட்கம்.!


Love propose kavithai,
Ponnai Varnikka,
Pen Kavithai,
Pen Oru Kavidhai