Thursday, June 25, 2020

Tamilan Kavithaigal Tamilil : Roja Flower Kavithai in Tamil

நிழல் நிழலை
போர்த்துக் கொள்ளும்

அந்த நேரம்

காய்கள் கனிந்து
பழமாகிக் கொண்டிருக்கும்

அந்த நேரம்

புதிதாய் மலர்ந்த
ரோஜா

தேன் சுவைக்க
வண்டொன்றை அனுமதிக்கும்

அந்த நேரம்

இதயத்தின்
துடிப்புகளோ

தாறுமாறாக
எகிறிக் குதிக்கும்

அந்த நேரம்

சொர்க்கம் கூட
வேதனை தருமா

என
நினைக்க வைக்கும்

அந்த நேரம்

நானோ என்
தனிமை போக்க

நிலவை
துணைக்கு அழைக்கிறேன்

ஒரு கோப்பை
பழ ரசத்துடன்


No comments:

Post a Comment